பூரிப்பு (குறுங் கவிதைகள் )

வானம்
சிலிர்க்கிறது
புயலைக்கண்டு !

பூமி
துடிக்கிறது
மடியில் சேர்ந்தமைக்கு !

எண்ணங்கள்
போதையாகிறது
நிஜங்களை நம்பி !

கனவு
கவிதையானது
அரங்கேற்றம் பண்ண !

புயல்
பூரிப்படைந்தது
அமைதி தரிசனத்தில் !

கடல்
புன்னகைக்கிறது
புயல் சின்னமானதில் !

புதிய இளங் கதிர்கள்
தலை சாய்க்கிறது
புன்னகை பண்ணிசைத்து !

விடுதலை
தாகம் தணிந்தது
புயல் கடந்ததும் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (10-Jan-13, 4:14 am)
பார்வை : 144

மேலே