வாயடைத்து போகாதே...
வாயடைத்து போகாதே.....!
பிறர் உன்னை
வசைப்பாடும் பொழுது....!
ஊமை இல்லை நீ....!
உன் வார்த்தைகளிலும்
ஊனம் இல்லை......!
பின் ஏன்
பின்தங்குகிறாய் எவர் சொல்லுக்கும்...?
உன்னை பற்றி
உனக்கு தெரியும்....!
ஊரான் என்ன
சொன்னால் என்ன
உன்வழியில் நடைபோடு ....!
மலர்கள் தூவும்
மனங்கள் உண்டு... !
முட்கள் போடும்
கரங்களும் உண்டு... !
மலர்களை கசக்காதே...!
முட்களை எடுத்துக் கொள்....!
உன் வழியிலே
உனக்கோர் வேலிபோட்டுக் கொள்ள....
உண்மையான அன்பு
உன்னிடம் உண்டு....!
உன்னோடு அன்பு கொள்ள
உலகில் இன்னும்
உயிர்கள் உண்டு...!
வருந்தாதே .....!
நெஞ்சை குத்தும்
நெருஞ்சி முட்களை
நினைத்து.....!
உனக்காகவே வாழ்...!
உன்னை தொடரும்
உலகம் முழுவதும்...!
கிணற்று தவளை யல்ல நீ...!
கிரகங்கள் அனைத்தும்
அறிந்தவள் நீ.....!
கவிதைகளில் புது
காவியம் படைப்பவள் நீ...!
கவிதை ஊற்று கொண்டு ....இந்த
கழனியை தூய்மை படுத்து....!