எதிர்பார்த்தபடியே ..!

மணநாளை நோக்கி
மனப்பந்தல் கீழ்
மங்கை நான்
மயங்கிய என் விழிகள்..!

கடக்கும் நாட்கள்
கழியாத கனவுகள்
கற்பனையில் நான்
கரைகின்ற என் உள்ளம்..!

சித்திரக் காட்சிகள்
சிருங்கார நினைவுகள்
சிந்தனையில் நான்
சிலிர்த்தபடி என் தேகம்..!

இம்சிக்கும் இரவுகள்
இமை மூடாக் கனவுகள்
இன்னாமையில் நான்
இயலாமையில் என் ஆசைகள்..!

நந்தவனச் சோலை
நதிபாடும் பாட்டு
நடைபோடும் நான்
நகர மறுக்கும் என் கால்கள்..!

பசி கொண்ட வயிறு
பக்கத்தில் உணவு
படுத்துறங்கும் நான்
பகை கொள்ளும் என் பருவங்கள்..!

வஞ்சிக்கும் தனிமை
வதம் செய்யும் இளமை
வனப்போடு நான்
வளையோடு என் கரங்கள்..!

சுந்தரக்கோலம்
சுடர் விடும் யாலம்
சுமையோடு நான்
சுகமாக என் மௌனங்கள்..!

தாழிட்ட நெஞ்சம்
தாமரை மஞ்சம்
தாலிக்காய் நான்
தாபத்தோடு என் கழுத்து..!

எண்ணமிட்ட வாழ்க்கை
எழுதப்பட்ட திருநாள்
எளிமையாய் நான்
எதிர்பார்த்தபடியே என் ஜீவன்..!

எழுதியவர் : ஹேயேந்தினி ப்ரியா (10-Jan-13, 5:02 pm)
பார்வை : 183

மேலே