குழந்தை தொழிலாளிகள்

பிஞ்சு கையில் ரேகை தேய வேலை
பள்ளி புத்தகம் சுமக்கும் வயதில்
குடும்பத்தை சுமக்கும் சுமைதாங்கிகள்
வாழ்கையின் வலிகள் மனதில் வடுகளாய்
கல்வியின் ஏக்கம் மட்டும் கண்களில் கண்ணீராய்
விளையாட்டை மறந்த ஈரமனம்
விடியலை தேடிப்பறக்கும் பட்டாம்பூச்சிகள்
இந்த சின்னஞ்சிறு பிஞ்சு தொழிலாளிகள் !

படிக்க ஆசைத்தான் அடுத்தவேளை உணவிற்கு
பட்டினி பயம் வந்து படிப்பை மறந்த வரலாறாய்
வண்ணமான வாழ்க்கை கருப்பு வெள்ளையாய்
வீடும் வேலையும் மட்டும் சுழலும் காலத்தோடு
தோய்ந்த முகமும் கலைந்த கனவுடன்
தெளிந்த சந்திரனாய் மின்னும் ஆசைகளை
இரவு தூக்கத்தில் சிதறவிட்டு விடிந்ததும்
இரைக்கு பறக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்!

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (13-Jan-13, 11:10 am)
பார்வை : 177

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே