"ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான்" (கதை சொல்ல போகிறேன்)

"ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான்"
(கதை சொல்ல போகிறேன்)

ஓரண்ணா காசுகொடுத்து
வாங்கி வந்த வெற்றிலையை
வாய் சிவக்க மென்னுவிட்டு
கடைத்தெருவு வாசலிலே
துப்பியதைப் பார்த்துவிட்டு
அண்ணாச்சி விரட்டுனதில்
அரக்க பறக்க ஓடிய கதை

இருட்டு தழுவியும் வீட்டுக்கு
போகாமல் சினிமா கொட்டகையிலே
கொட்ட கொட்ட முளித்திருந்து
இடைவேளை நேரத்திலே
கண்டதையும் தின்னுதீர்த்து

நடுசாம சந்தியிலே கொல்லைப்புறம்
ஏறிவர ஆத்தாக்காரி காத்துநின்னாள்
அரைத்தட்டு சோறோட,,

அள்ளித்தந்த பாசமதை அறவே
புரிந்திராமல் அரைவேக்காடாக
அலைந்து திரிந்த அந்தக் கால
சொந்தக்கதை,,

அழகாய் படித்துவிட்டு அவிழ்த்து
விட்ட காளையாட்டம் அடக்கி
வைத்த திமிர்களை அப்பப்போ
வெளிக்கொணர ஆங்காங்கே
வழித் தகராறு ,,

அடியும் உதையும் ஆர்பரிக்க ,,
அத்தனையும் கவனிக்காமல்
அகிலமே நம்மை பார்த்து
அசிங்கமாக சிரித்து நிற்க,,
நம்மை நாமே பீத்திகொண்டோம்

ஐந்து காசு சம்பாதிக்க
துப்பு இல்லாத காலத்திலே
ஆத்தா உடைய வியர்வையிலே
வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை,,,

வெட்கமே இல்லாமல் செலவுக்கு
பணம் கேட்டு வாசற்படி
விறகெடுத்து,,,வீட்டுக்கதவை
உடைத்து நின்ற,,,,அந்த கதை
முடிந்தேறிய வெட்கக் கதை

அறிவிழந்த நேரத்திலே
சிறுக்கிமகள் பார்வை பட
காத்திருந்த இளமையெல்லாம்
காற்றிலேயே பறக்கவிட்டு,,

கனவுகளில் கண்டதெல்லாம்
கலர் கலராய் தெரிந்ததுமே,,,
குட்டிச்செவுற்றை கெதி கிடந்து
குட்டிச்செவுறாய் போனகதை,,
எங்கள் கதை

அவள் கண்சாடை வீசிவிட
கைப்பிடியளவு இதழ் சுழிக்க
சுருக்கென்ற போதையிலே
காசையெல்லாம் இறைத்துவிட்டு
காலியாய் இருந்த கணம்
எட்டிக்கூட பார்க்காமல்
தட்டிவிட்டு போனாளே,,

எதேர்ச்சையாக பார்த்த கணம்
எக்காளமாய் கேட்டபோது
அண்ணா நான் அப்புடியில்லையென
சொல்லி அடிக்காமே அடித்தாளே
ஆப்புவைத்து நொந்தக் கதை
அந்தக்கதை

அதை மறக்க யோசித்து
ஆத்தாக்காரி சேர்த்து வைத்த
அழுக்கு கைக்குட்டையின்
கசங்கல்கள் நிரம்பிய
ரூபாய் நோட்டுக்களை
அபேஸ் பண்ண அலமாரியை
அக்கு அக்காய் பிரித்தக் கதை
இந்தக் கதை

இத்தனையும் பொறுத்திருந்து
வார்த்தைக்கூட சொல்லாமல்
எரிந்து எரிந்து விழுகையிலும்
என் அன்னையவள் முகத்தினிலே
எச்சில் தெறித்த நொடிகளிலும்
நான் வாடி நிற்பதை பார்க்க
முடியாதவளாய் தவித்துவந்து
தலை வருடுவாள்

இடைப்பட்ட நேரத்திலே
தேயிலை பந்தலிலே
குடித்து விழுந்து நான்கிடக்க
எங்கோ ஒரு மரண ஓலம்
யாரோ உரக்க உரைக்க என்
செவிகளினூடே லேசாய் விழுகிறது

எழுந்திருக்க முடியாமல் என் நினைவுகளை
முடக்கிவைக்கப்பட்டிருந்த போதை
தெளிந்தவனாய் ,, மெதுவாய் எழுந்து
காதுகளில் கரம் வைத்து கேட்கிறேன்

எலேய் மாறி,,,,,, செவத்தாயி பயல்
செவலெ அங்குட்டு எங்குனாச்சும்
கெடக்குறானா பாருலேய் ,,
செவத்தாயி செத்து கெடக்கா
முள்ளிகாட்டுக்கு வெறகு வெட்ட
போன எடத்துலலேய்
படுபாவியக்கண்டா சொல்லிபுடுலேய்
பொணமெடுக்கப்போற நேரமாச்சுலேய்
பாவிப்பயலுக்கு வாய்க்கரிசி போட்டு
ஒரு நட கொள்ளி போடா கூட
குடுத்து வைக்காமே போயிரும் போலிருக்கே

எனும் புலம்பல்களை கேட்டவனாய்
உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை,,
நெட்டித்தவனாய் விழிந்து எழுந்தோடுகிறான்,,,

விழுங்க முடியாத படி நெஞ்சை
அடக்கிக்கொண்டு வந்த கண்ணீர்க்
கணைகளை ,,,தொண்டைக்குழி
வலியோடு சுமக்க முடியாமல் ஓடுகிறான் ,,

தொலைத்து விட்ட வார்த்தைகளை
நெஞ்சில் சுமந்து கனத்த பாரங்களோடு
இறந்தவளை கட்டித் தழுவ முள்ளிக்காட்டு
வழியே கால்களை முட்கள் கிழித்துவிட
ஓடுகிறான்,,

பேருந்து வருகின்ற நேரம் கூட இல்லையே
பேதலித்து துடித்த நேரத்தில் வேறு
எவருக்கும் சொல்லும்படி எந்த கைம்மாறும்
செய்யாதவனாய் யாரை துணைக்கழைப்பேன்
எனை அங்கே கொண்டு சேர்க்க,,,

எதிர்காலமாய் இருந்தவளை அவளின் இறந்தகாலம்
வரை புரிந்திராமல்,,,,கண்கள் இருந்தும் ஒரு
குருடனாய் அவன் வாழ்வை இதுவரை
தொலைத்து விட்டதை எண்ணி ஓடுகிறான்,,,

எத்தனையோ செவத்தாயிகள்
இறந்து இப்படிப்பட்ட செவலைகளின்
மனமாற்றத்திற்கு காரணமாகின்றனர்

அடித்தாலும் துடித்தாலும் அழுதாலும்
மாண்டவர் மீண்டு வருவதென்பது அரிது

இருக்கும் இவ்வாழ்க்கையில் வாழுவோரை
புரிந்து நேசித்து அன்பு பகிர்ந்து விதித்தொட்டால்
போயி சேருவதே உத்தமம் அன்பானவர்களே

"புரிந்துக்கொண்டால் பிரிவுகளில் வலியில்லை"

நன்றி

அனுசரன்,,,

எழுதியவர் : அனுசரன் (13-Jan-13, 8:08 pm)
பார்வை : 199

மேலே