சொந்த ஊருக்குப் பொங்கல் வைக்கப் போறேன்...
எங்கள் ஊரில் ஒரு ஆறு
தண்ணீர் இல்லாமல்
ஐந்தாக ஓடிக்கொண்டிருக்கிறது
ஆற்றின் கரையெங்கிலும்
ஓங்கி வளர்ந்ததொரு பனை மரங்கள்
அக்கரையில் பச்சை பசேலென்று
சீமை கருவெல் தோப்புகள்...
கண்ணாடி சிறகு தட்டான்கள்
அந்தி சாயும் நேரத்தில்
இரு நேர்விழியாய் ஆந்தைகள்
இரவெங்கும் சிரசாசண வெளவால்கள்
என பறவைகளால் நிறைந்திருக்கும்....
ஒத்தையடிப் பாதையெல்லாம்
நெருஞ்சி முள் ரத்தவகை சொல்லும்
அங்கே கரும் புலப்பெயர் நீர் போல்
அன்புடை நெஞ்சம் காதலும் சொல்லும்....
செக்கசெவேல் கள்ளிப் பழத்தை
முள்ளு படாம திண்ணுட்டு...
சோளத்தட்டை கட்டி
பச்சரிசி பனவெல்லம்
சுக்கு தட்டிப்போட்டு
பொங்கல் வைக்கப் போறேன்...
வெள்ளாமை வெளச்சல் இல்லாத ஊருக்கு
பொங்கல் ஒரு கேடானு
பல்லுமேல நாக்கப் போட்டு பேசிடாதீங்க
நாங்க இதவிட்டா
எப்படித்தான் திங்கிறது
சக்கரைச் சோறு....!?