மண்வாசனைகள் விற்பனைக்கு..............

ஒரு சமூகம் நம்மைக்
கடந்து போயிருக்கிறது......

வில்லாக்களுக்கான
வெளிச்சம் கொடுத்து
இருட்டை போர்த்தியவைகளாக.....

நறுமணப் பகட்டுக்காய்
நரகச் சேற்றின் நாற்றக் குளியல்
நிஜங்களாக.....

மென்பஞ்சு காலணிகளுக்காய்
அமிலப்புகை சுவாசித்துத்
திணறும்
நுரையீரல்களாக..................

வக்கிரங்கள் இறக்கிப்போக
கழிப்பிடச் சந்துகளில்
கந்தலாய்க் கிழியும்
பெண்மைகளாக.........

இரவுப் பேருந்து வெளிச்சம்
பிரித்த... சாலையோரக்
கூடாரக் குடில்
தாம்பத்தியங்களாக.......

அழுவது வெட்கமென
மரணங்களை
மௌனங்களால் விழுங்கிப் போகும்
இயந்திரங்களுக்கிடையில்.....

சாவுகளைக் கூட
திருவிழாவாய்க் கொண்டாடும்
ஒரு சமூகம்
நம்மைக்
கடந்து போய்க்கொண்டுதானிருக்கிறது......

எழுதியவர் : சரவணா (13-Jan-13, 1:36 pm)
பார்வை : 193

மேலே