தன்னம்பிகை ..
நீ என்னோடு இருக்கும்போது,
எனக்கு யானை பலம்.
நீ என்னை தள்ளி சென்றால்,
நான் இல்லை நலம்.
சில சமயம் விலகி நின்று
வேடிக்கை பார்க்கிறாய்.
கண் மூடி அழும் என்னை,
அணைக்க மறுக்கிறாய்.
வெறுமையான இவ்வுலகில்,
தனித்து நிற்க வைக்கிறாய்.
தோல்விகளை கண்ணீரில் சுமந்து,
வாடி அலைய செய்கிறாய்..
ஏமாற்றங்கள் எனக்கு பழகி போக,
என் நரம்புகள் சுருங்கி போக,
என் இதயம் பயத்தில் படபடக்க,
என் அன்பே, என்னை விட்டு எங்கே சென்றாய்?
வந்து என்னை அணைத்து கொள்.
வாழும் வழி அதை காட்டி கொடு.
வீழ்த்தும் வலி இனி வேண்டாம்,
உன்னை விட்டு பிரியமாட்டேன்,
நீ பிரிந்து செல்ல விடவும் மாட்டேன்,
ஓருயிராய் வாழ்வோம் வா !
பொறுப்புள்ள மனிதன் நான்,
என வாழ்ந்துக் காட்ட,
என்னிடம் வந்து விடு,
என் தன்னம்பிக்கையே !
என் அருகே வா ! முத்தம் வேண்டாம்,
என்னை முட்டாளாக்கும் முத்தம் வேண்டாம்,
சத்தம் போட்டு சித்தம் கலக்கும் நோய் வேண்டாம்,
தன்னம்பிகையே ! நீ வேண்டும் !
தடுமாறி விழுந்தாலும் எழ வைக்க நீ வேண்டும்,
தேடி வரா வாய்ப்புகளை தேடி பெற நீ வேண்டும்,
பிரிவினைகளை இணைக்க நீ வேண்டும்,
என் தாயகம் சிறந்தோங்க நீ வேண்டும்.