நான் தணிக்கைக்குரியவன்...........
பெருங் கவிகளுக்கு
ஓர் விண்ணப்பம்..........
சிப்பிக்குள் சிறைபுகுந்த
மழை...
காட்சிப் பொருளாகிறது....
தவிர்த்த பெருவெள்ளம்
அலையாடித் தவழ்கிறது......
நீங்கள் சிறை புகுந்து
சித்திரம் தீட்டிக் கொள்ளுங்கள்...
நாங்கள்
அலையாடித் தவழும்
மழலைகளாய்
கிறுக்கிக் கொள்கிறோம்......
மதிப்பெண் வேண்டாம்....
மழலைக் கிறுக்கல்கள்
விற்பனைக்கு அல்ல......!
யாப்பூட்டி எதுகை சூட்டி
மோனை போர்த்தி
அலங்கரித்துக் கொள்ளுங்கள்
உங்களுக்கென ஓர்
சிறகுச் சிம்மாசனங்களை......
எங்களுக்கான நிலவொளிகளை
ரசித்துக் கொள்கிறோம்
ஒட்டிய மண்
உதிரத் தட்டுமெழும்
கரவோலிகளோடு..........
எங்கள் இலக்கணப் பிழைகளில்
உப்புக் கரிக்கும்...
உதிரம் ஒழுகும்....
எச்சில் தெறிக்கும்...
ஏக்கம் பெருகும்... ஏனெனில்
நாங்கள் விதைப்பதொன்றும்
அறுவடைக்கல்ல...........