பொங்கும் எங்கும்
புதியேன புகுதலோ
போகி
பழையன கழிந்ததா
பேருக்காக ஒரு கொண்டாட்டம்
தமிழனை வெட்டி புதைத்து விட்டு
பொங்கலிட்டொம்
பொங்கியது பொங்கல் அல்ல
எரிந்தது அடுப்பல்ல
தமிழனின் உள்ளம்
தவறாமல் வரும் பொங்கல்
தவறி போனோர் யார்
தமிழனை கொன்றுவிட்டு
தமிழ் தை எங்கு பிறக்கும்
மூடர்களே
தமிழன்னை மாரருத்து
பால் பொங்கலா
தமிழா பொங்கல் வரும் போகும்
போன உன் தாய் தங்கை தமையன் தமிழினம் வருமா ?
பெருங்கடல் பொங்கும் எங்கும்
பேரலையாய் நீ மாறு..