நீ என்னும் கவிதை...

நீ
கண்களால் வாசிக்கிறாய்.
புரள்கிறது
என் இதயத்தின் பக்கங்கள்.
************************************************
அசையும்
உன் நெற்றிக் குழல்...
காற்றில்
வளைந்து...வளைந்து
எழுதுகிறது
எனக்கான கவிதையை.
****************************************************
உன் காதுகள்....
அழகு செய்கிறது
நீ அணிந்திருக்கும்
தோடுகளை.
கர்வத்தில் தலையாட்டும் தோடுகளை
ஏளனமாய்ப் பார்க்கறது
நீ பார்க்கும் கண்ணாடி.
***********************************************************
நீ நடந்து செல்கிறாய்..
ஒரு மகாராணிக்கான வரவேற்பாய்...
நீ செல்லும் பாதையிலுள்ள
குப்பையை சுத்தம் செய்து
முன் செல்கிறது...காற்று.
*************************************************************
உனக்கான கவிதையை
எழுதி வைத்திருக்கிறேன்...
வாசித்துப் பார்த்த மொழி...
தயங்கி தயங்கி ...
கசங்கி விடுகிறது
காகிதங்களில்.
**************************************************************

எழுதியவர் : rameshalam (15-Jan-13, 9:45 pm)
Tanglish : nee ennum kavithai
பார்வை : 124

மேலே