அன்பு கிழம்

அறுவது வயதிலும்
தில்லான தைரியம்
தான் சாப்பிட தானே உழைக்கும்
தாத்தா.
உறவுகள் உதறிய பின்னர்
உதவும் சொந்தமாய்
தன் கை கால்கள் மட்டும்
தசைகள் தளர்ந்து விட்ட நிலையிலும்
தளராத நம்பிக்கையுடன்
என்றும் சிரிப்புடன்
மனதில் ஏக்கத்துடன்
அன்பு கிழம்!
அட கடவுளே
கொடுமை செய்வதிலும்
உன்னை மிஞ்ச யாராலும் முடியாது
பார்க்கும் நெஞ்சம் பரிதவிக்க
பதறிய கைகளுக்குள் சிக்கியது
பத்துரூபாய்!
எனக்கும் ஆசை தான் கூடுதல் குடுக்க
கடவுளின் கருணையில் நானும் ஏழை தான்
உதவ மனம் உள்ளது குடுக்க பணம் இல்லை
குடுக்க பணம் இருப்பவர்கள்
ஏழை கிழத்தை ஏழனமால் பார்க்காமல்
அவர்களின் வாழ்கையில் கடவுளாய் மாறுங்கள்
காலம் நமக்கும் வரும் என்ற நம்பிக்கை
நம்மை போல் உள்ள இளைஞ்சர்களுக்கு
காலம் போன இளைசனுக்கு இல்லை

எழுதியவர் : Vicky (17-Jan-13, 3:55 pm)
சேர்த்தது : Vicky Vandiperiyar
பார்வை : 103

மேலே