இப்போது இந்தியா
அந்நியன் எமது நாட்டை
சூறை ஆட பார்க்கிறான்
அரசியல்வாதியோ எமது நாட்டை
கூறு போட்டு விற்க பார்க்கிறான்.
பாமர மக்கள் வாழ வழிஇல்லை
பந்தா காணிக்கும் பணக்காரனுக்கு
வழி எல்லாம் சிவப்பு கம்பளம்.
அரக்கனை கொன்ற தெய்வங்களை
அயாரது போற்றும் நாம்
ஏன் இன்னும் கலியுக அரக்கர்களை
விட்டு வைத்துள்ளோம் ?
வீரம் மிகுந்த என் இந்தியா
ஊழல் நிறைந்த நாடுகளில்
முதல் இடம் கேட்கின்றதே!
அரை மக்கள் தொகை இளைஞ்சர்கள்
இந்தியாவில் இருக்கின்ற போதும்
வல்லரசு பதவியை தேடும் அவலம்
வாழ்ந்து இறந்த வீரர்கள் இருந்த இந்தியா
இப்போது தாங்குவது யாரை தெரியுமா?
நான் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்ற
என்னை போல் உள்ள கோழைகளை தான்.