காற்று வெளியிடை கண்ணம்மா....பாகம் 4
புத்தகத்தின்
மயிலிறகுக் குஞ்சுகள்
திருப்பிய பக்கமெங்கும்
உன் சாயலில்…..
**********************
நிமிர்ந்து பார்ப்பதில்லை
என்றாகிவிட்டது
உன் வழியெங்கும்
என் காலடி தடங்களை
விட்டு வந்தேன்…
**************************
உன் நெற்றி
என் நெஞ்சில் பொட்டிடுதல்…
********************************************
வழிப் பிள்ளையாரைப் போலாவது
என்னை
பார்த்துச் செல்லலாம்…
***********************************
ஒரு ஜன்னலோர ரயில் பயணத்தை
உன் நினைவோடு துவக்கினேன்….
நீயும் முயற்சிக்கலாம்
காதல் வரும்….
**********************
கோலமாவு
துடைப்பம்
தண்ணீர்
சாணம்
அருகம்புல்
பூசணிப்பூ
நான்…
என்னை கண்ணால் கூட
தொடவில்லை நீ…
*****************************