அரும்புகளை இறுக்காதே

முல்லை அரும்புகளை
இறுக்கி கட்டும் வேளையிலே -பூக்கள்
கழுத்தெலும்புகள் உடைபடும் ஓசை
என் நெஞ்சை உலுக்குகிறதே !
பூ விற்கும் பெண்ணிடம்
எப்படிச் சொல்வேன் ?-பூக்களும்
அவள் போல் ஒரு பெண்ணினம் என்று

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (18-Jan-13, 3:41 pm)
சேர்த்தது : raja.arp
பார்வை : 80

மேலே