கணினியால்......!

கணினிக்குள்
களமிறங்கினால்
காலநேரங்களின் மறதி !

சுற்றிலும்
சுரங்கள் மாறிப்போன
சுத்தமில்லாத ராகங்கள் !

புதிய
புத்துணர்வழிக்கும்
புகழாரம் சூட்டும் பட்டம் !

மின்சார
மின் அஞ்சல்களில்
மிருதுவான போதைகள் !

அழுத்தம்
அதிகரித்தாலும்
அளவு குறையாத வேகம் !

விரல்களின்
விருப்பம் அறிந்து
விளையாடும் தட்டச்சு !

எழுதியவர் : புலமி (18-Jan-13, 4:52 pm)
பார்வை : 128

மேலே