கவிஞர் கவின் சாரலன் பதிவு
அருமை நண்பர் கவிஞர் கவின் சாரலன் என்ற சங்கரன் அய்யா இந்த தளத்தில் இதுவரை 1353 கவிதைகள் படைத்திருக்கிறார்.
பெரும்பாலானவை நான் வாசித்திருக்கிறேன். நிலா, வெள்ளை ஆடு, மழையே வா, மழையே போ, குயில் பாட்டு, வானவில், ரோஜா, நாய்க் குட்டி என்ற தலைப்புகளில் நண்பர் கவின் சாரலன் எட்டு மழலைக் கவிதைகளும் எழுதியிருக்கிறார். இவரின் கவிதைகள் எனக்குப் பிடித்தவை.
உதாரணமாக: 'ஒரு பானை சோற்றுக்கு ஒன்று பதம்' என்ற பழமொழிக்கு இணங்க இவரின் மழலைக் கவிதை ஒன்று இங்கே தருகிறேன்.
வானவில்
வண்ண வண்ண வானவில்லே
நீ வளைந்து இருப்பதென்ன வானவில்லே
பறவை எல்லாம் வந்து பச்சை குதிரை தாண்டவா
வண்ணங்கள் ஏழு கொண்ட வானவில்லே
விண்ணை விட்டு வருவாயா
என்னை சுற்றி வருவாயா
ஏழில் ஓன்று தருவாயா.