சிரிக்காதே எனது நாட்குறிப்பே....!
புரட்டுகையில்
புரளும் நினைவுகளில்
புதிதாய் உணரவைக்கும்
புன்னகைகளை வரவேற்கும் !
தொலைந்த
தொலைத்த நிமிடங்கள்
மறுபிறவிகள் எடுத்து வர
மழலையாக்கித் தாலாட்டும் !
வரிகளில்
வசந்தகாலங்களை
வண்ணமிழந்து காணும்
வரட்டுப் பிடிவாதம் தரும் !
நகரும்
நடைபிறழ்வான
கதைகளுக்குள் சிக்கி
கலக்கமுறும் விழிகளுக்குள் ,
இருண்ட
இரங்காத குணங்களின்
அற்பமான செயல்களினால்
ஆறுதல் தேடிய பொழுதுகள் !
குறிப்புகளால்
குதறப்பட்ட பக்கங்களில்
அவசரகதிகளின் காட்சிகள்
அதுவும் அவசியமென புரியும் !
அலமாரியில்
அடுக்கப்பட்டவற்றில்
அவ்வப்போது தென்பட்டு
அன்போடு அழைக்கும் உன்னில் ,
இதயம்
இதமாக மாறுகிறது
சிலமுறை ரணமாகவும் ;
சிரிக்காதே எனது நாட்குறிப்பே!