துயில்(உறக்கம்)
நானும் நம்பினேன் உன்னை!
நீவருவாய் என்றும் என்னுடன்
என் இறுதிவரை மரணம்வரை
நானும் நம்பினேன் உன்னை!
நீயோ பொய்க்கிறாய் அடிக்கடி
தொலைந்து போகிறாய் ஏனோ?
ஆழ்மனத்தின் வலியை கண்டு
ஓடிஒழியும் உன்னையும் நம்பினேன் !
தேடும்போது உடனே வருவாயென
என் துன்பத்தை துலைக்க
ஆத்மாவின் அமைதி காண
நீவருவாயென உன்னையும் நம்பினேன்!
இப்போதெல்லாம் எங்கேயோ தொலைந்தாய்
என் கவலையால் நீயும்
எங்கேயோ தொலைந்தாய்!