உன்னைத்தெரியும்..

குடையிருந்தும்
நனைகிறேன் .. நீ
நலம் விசாரிப்பாய் என்ற
நம்பிக்கையில் ..!

சுகமிருந்தும்
அழுகிறேன் ..நீ
கைக்குட்டை தருவாய்..
கண்ணீர் துடைக்க ...?

நிழலிரிந்தும்
வெயில் காய்கிறேன்.. நீ
விசிறி வீசுவாயென்ற
வீம்பில்..!!

காதலிருந்தும்
காட்டிக்கொள்ளவில்லை ...நீ
உதாசீனப்படுத்திவிடுவாய் என்ற
நெருடலில் ...!!

எழுதியவர் : அபிரேகா (19-Jan-13, 1:14 pm)
பார்வை : 89

மேலே