என் காதல் சொன்ன தருணம்……

மொட்டு அவிழ்ந்து மலரான
நிகழ்வு போலிருந்தது…

என் முன்மொழிவில்
துவங்கிய நிசப்தம்
உடல் உள்பரப்பின்
நரம்புப் பாதையெங்கும்
கிளை கிளையாய் பரவி
என் மொத்த கவனத்தையும்
உன் ஒற்றைப் புள்ளியில் நிறுத்தியது…

உன் அருகில் அமர்ந்த
உணர்வு மயக்கத்திலிருந்து
மீள முடியா தருணத்தில்
நீ மறுகாதல் சொல்லி
என் தோள் சாய்ந்ததில்
நினைவிழந்து போனேன்….

நீ எப்படி இயல்பாய்
இருக்கிறாய் என்றே தெரியவில்லை
துளியும் வேடிக்கையின்றி
என்னையே பார்ப்பதும்…
படபட இமையால்
தென்றல் திருடுவதும்….
காதுமுடி இழுப்பதும்….
விரல் நகம் அழுத்துவதும்….


எதிர்க் கொள்ளவே முடியவில்லை…
காதலுக்கு ஏங்கிய
நாட்களின் தவிப்பை விடவும்
காதல் சொன்ன தருணத்தில்
நிசப்தத்தின் மரண வேட்கையை…!

எழுதியவர் : ஆண்டன் பெனி (19-Jan-13, 6:09 pm)
பார்வை : 224

மேலே