.............தனியே விலக...........

தள்ளியிருக்க முடிவுசெய்திருக்கிறாய் !
பிரிவு எனும் பெரும் பாரம் சுமத்தி !
இடி மின்னலுடன்கூடிய இதமான தென்றலாய்,
எனை நீ வந்தடைந்த நாள் நினைவில் உள்ளது !!
கண்ணீர் கம்பலையுடன் கதறவைத்து புயலாய்,
நீ புறப்பட்டுப்போகிற நாளும் கனவில் உள்ளது !!
உன் முடிவை வரவேற்பதைக்காட்டிலும்,
சிரமேர்க்கவேண்டுமல்லவா நான் !!
ஏனெனில் !
தேவதையாய் தெய்வமாய் ஆயுளை அலங்கரித்தவள் நீ !!
விடு !
இருக்கிற நாள்வரை !
உன் நினைவின் தாவரவேருக்கு கண்ணீர் ஊற்றி,
காத்து வளர்க்கட்டும் உயிர் !
மூன்று வேளையும் முறையாய்த்தொழுது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-Jan-13, 10:34 am)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 105

மேலே