சண்டையிடாமல் காதலா

சண்டையிடாமல் காதலா என
வினவினால் என் தோழி...
ஊடல் இல்லாமல் கூடலில்லை
என்பதனை நானும் அறியேன்...
சண்டையென்று வந்த பிறகு
வெற்றி தோல்வி நிச்சயம்...
காதலில் யாரிடம் யார் தோற்க
ஒரு கண்ணைக் குத்தி
மறு கண்ணுள் காட்சியா?
காதலியின் மனதைப் புண்படுத்தி
தழும்பாக்கிடும் கடுஞ்சொல் பேசி,
பேசாது ஊமை நாட்களை
பரிசாக தருவிக்க மனமில்லாது,
தவறு யார்மீது இருந்தாலும்,
நானே படிந்து விடுவேன்
என் பாசக்காரியிடம்

எழுதியவர் : (6-Nov-10, 10:29 am)
சேர்த்தது : Thamizh
பார்வை : 436

மேலே