நெஞ்சில் நின்றவை,,,,,

நெஞ்சில் நின்றவை,,,,,

வசதியாய் ஒரு வாழ்க்கை
வாழ வேண்டுமென்றாய்
என்னிடமுள்ள அத்தனை
வசதிகளையும் இழந்தேன்

அப்பொழுதெல்லாம் என்னோடு
நடந்து வருவதையே சுகமாய்
இருக்கிறது என்ற வார்த்தைகள்
இன்று ஒவ்வொரு இரவிலும்
ஒவ்வொரு எண்ணங்களை
விதைக்கிறது ஏனென்று அறியவில்லை

காரணங்களே இல்லாமல்
காசு மழை பொழிந்த காலங்கள்
இன்று என்னிடம் இல்லையென்றறிந்தே
உன் வாசகங்களில் கடுமைக் காட்டுகிறாயா,,???

காதல் செய்கிறேன் என்ற நேரத்திலே
என்ன கண்டாய் என்னிடத்தில்
என்று கேட்க மறந்தவனாய் உன்
வார்த்தை வெப்பத்தில் இனிமை
நீராடினேன்,,

இன்று எத்தனை நீரள்ளி என்னில்
இறைத்த பொழுதினிலும் எரிமலை
குழம்பாய் எரிந்து கொண்டே இருக்கிறது
என் மன நினைவுகள் உன்னை சந்தித்த
நாட்களை சிந்திக்கும் தருணங்களில்

எல்லா விடயங்களிலும் நூற்றுக்கு
நூறாய் வெற்றி பெற்றவன் உன்னை
தேர்ந்தெடுப்பதில் மட்டும் பூஜ்ஜியமாய்
எப்படி போனேனென்று யோசித்து
பார்க்கையில் விடைக்கிடைக்காமல்
பைத்தியமாகிறேன்,,,

மாறிய விடியலில் போதைத்
தெளிந்தவனாய் மாறிவிட்டேன் நான் ,,
மாறா உன் மரண வசையடி
நினைவுகள் என் மனதில் தோன்றி
கொல்லுகிறதே என்று உன்னிடம்
உரைக்க பயந்தவனாய் இருக்கிறேன்
உண்மையாய் உன்னை நேசித்துவிட்டதனால்,,

நீ போகின்ற பாதையை கண்டும்
கண்டிக்க உரிமையிருந்தும்
காணாமல் நடித்து உருக்குலைகிறேன்,,,,
எங்கு என் அக்கறை உணர்வுகளில்
என்னை புரிந்துக்கொள்ளாமல்
வெறுத்து விடுவாயோ என்று,,,,

உன் விதிகளில் விளையாடும்
அதிர்ஷ்டமில்லாதவனாய்,,நான்
போனதாலா,,,,நீ என் விதிகளில்
சுயநலமாய் ஆட்கொள்ளுகிறாய்,,,

பற்றிய தீக்குச்சி அதன் ஆயுளை
அறியாத அவஸ்த்தையை போல்
உன் அதிர்ஷ்டங்களின் நீளம்
என் உயிருள்ளவரைதான் என்பதை
அறிய மறந்து விட்டாயா ???

ஏனிப்படி செய்கிறாய் என்று
என்னுள் நானே பல வினாக்களை
வினவி வினவியே வினாக்களுக்கு
பஞ்சமாகிவிட்டது,,,செயலிழந்த
என் மூளை நரம்புகளில்

இன்றுன் ஆசைகளுக்கு பணயம் வைத்துவிட்ட
என் உறக்கங்களை திருப்பி தேடுகிறேன்,,அதை
நீ களவு செய்து கொண்டுவிட்டமையால்,,,,,,,,,,

அனுசரன்

நான் பார்த்து பழகிய மனிதரை
பற்றிய நெஞ்சில் நின்ற உணர்வுகள்

எழுதியவர் : அனுசரன் (21-Jan-13, 4:15 am)
பார்வை : 587

மேலே