உன் அப்பாவும் இப்படிதான்

அம்மா ..
யாரடா கவிதா ..?
யாருமே இல்லையம்மா ..!
ஏனடா இரவில் பிசத்துகிறாய் ?
பாதகி நித்திரையிலும் விடுகிறாள் இல்லை .
...
பாடசாலை நண்பியம்மா
நீ படிப்பது ஆண்கள் கல்லுரியடா மகனே ..
மீண்டுமேன் பகலிலும் பிசத்துகிறாய் ..?
பாதகி பகலிலும் துன்பம் தருகிறாள் ..
..
உன் அப்பாவும் இப்படிதான்
பகல் இரவு தராமல் நினைவை தந்தார் ..
கவனம் படிப்பு .....!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (21-Jan-13, 6:26 am)
பார்வை : 152

மேலே