பேரழகி
பெண்ணே !
உனது பார்வை காந்தம் தான் -அதற்காக
எல்லோர் இதயத்தையுமா ஈர்த்துக் கொள்வது ..
உனது விழிகள் அம்புகள் தான் - அதற்காக
எல்லோர் இதயத்திலுமா பாய்வது
உனது பேச்சுக்கள் கவிதைத்தனமானது தான்-அதற்காக
எல்லோர் இதயத்தையுமா கவர்வது
உனது சிரிப்பு மத்தாப்பு தான் - அதற்காக
எல்லோர் மனதிலுமா பூப்பது
உனது நளினம் காதல் வலை தான் -அதற்காக
எல்லோர் இதயத்தையுமா சிறை பிடிப்பது