கருவறையும் கல்லறையும்

நல்லவை கெட்டவை கலந்திட்ட
சான்றோர் சதியோர் நிறைந்திட்ட
இருப்போர் இல்லாதோர் அடங்கிட்ட
உலகைக் கண்டிட உறங்கி விழித்திடும்
இருட்டில் இருந்து வெளிச்சம் பார்க்க
தங்கிடும் அறையே கருவறை !

உணர்வுகள் அறவே இழந்திட்டு
வாழ்வின் எல்லையை கடந்திட்டு
இன்பம் துன்பம் அனுபவத்திட்டு
விழித்திட்ட உலகை விலகிட்டு
ஒளியில் விடுபட்டு இருளில் அடங்கி
மறைந்திடும் அறையே கல்லறை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Jan-13, 2:48 pm)
பார்வை : 154

மேலே