புகை வேண்டாம் என் உயிரே உடலே !

புகைக்க தெரியாதவனுக்கும் என்
புகையின் வலி தெரியும் ;
கலங்க தெரியாதவனுக்கும் என்னால்
கலங்க தெரியும் ;
ஆம் .,
நான் தான் புகை
இல்லை இல்லை இலை
புகையிலை !
நான் கர்வம் கொள்கிறேன் !
என்னை வாங்கி விடுவதால்
நீ ஒரு பெரும் வாகை சூடி !
என்னவென்று தெரியவில்லை
என் மூலமாகவே உனக்கு
ஒரு பெரும் கோபுரம் கூடுகிறது ;
என்னை விடுவதால் மூச்சிழந்து போகிறாய் !
என்னை ஏற்பதால் மூச்சடைத்து போகிறாய் !
என்னை விரும்பி விடுவதால்
உன் வாய்'மையின் நிறம்
வலு சிவக்கும் !
என்னை மூழ்கி சுவைப்பதால்
உன் பற்களின் வண்ண செறிவு
மேலும் பலப் பளக்கும் !
என்னை உன்னுடன் கொண்டதால்
உன் சொர்கத்தின் பயணம் விரைவில் கூடுகிறது !
காலம் மெல்ல மெல்ல கரைந்தே போகிறது !
நான் கவலை கொள்கிறேன் !!!?
உன் செம்பாலும் என்னைச்
சுவைத்தால் வெம்பிப் போகும் ;
உன் நுரையும் என்னைச்
சுமந்தால் வீங்கிப் போகும் ;
உன் மனமோ என்னை
ஏற்றால் இருமியேச் சாகும் ;
எதற்காக என்னை இத்தனை நாட்கள் ஏற்றாய் ?
( சுவாசகம் பேசுகிறது )
நான் இன்னும் கருகிதான் கிடக்கிறேன் ;
நீ விட்ட புகையால் ,
நீ விழுங்கிய புகையால்
நான் மேலும் கரியாகத்தான் ஆகிறேன் ;
எப்போது விடுவாய் இந்த புகையை ?
கலங்குகிறேன்
நான்
கலங்குகிறேன்
பொது இடங்களில் புகைக்க மறுத்த நீ
முழுவதுமாய் மறக்க ஏன் மறுக்கிறாய் !
இறந்த பின்பு
உனக்கு மற்றவர்கள் போடும் கொள்ளியை உனக்கு தெரியாமல் உனக்கே போடுகிறாய்
ஒரு கொள்ளியை
விட்டு விட்டு விட்டு விட்டு
எப்போது விடுவாய் இந்த புகையை
இனி புகை வேண்டாம்
என் உயிரே உடலே !