சூரியன் உதித்ததா ..?

ஒரு கிராமத்தில் பாட்டி ஒருவரிடம் தான் நெருப்பும்
சேவலும் இருந்தது ..!ஊர் மக்கள் எல்லோரும் பாட்டியிடமே நெருப்பு வாங்கி அன்றாடம் சமைப்பார் ...!
அதேபோல் ஒரே ஒரு சேவல் இருந்ததால் அது கூவியே பொழுது விடிந்து சூரியனும் வந்ததாக பாட்டி நினைத்தார் -பாட்டிக்கு ஒரு நாள் கர்வம் வந்தது தான் இல்லாவிட்டால் இவர்கள் சமைக்கவும் முடியாது .சூரியனும் உதிக்காது என்று எண்ணி ..ஊரை விட்டு ஓட நினைத்து சேவலுடன் அடுத்த ஊருக்கு சென்று விட்டார் ...!
சில நாட்களின் பின்பு அந்த ஊர் நபர் ஒருவரை பாட்டி சந்திக்க நேரிட்டது ..
அப்போது பாட்டி கேட்டார் உங்க ஊரில இப்ப சூரியன் வருகிறதா ? நெருப்பு இருக்கிறதா ?
என்று ...!
"எப்படித்தான் சிலர் நினைப்பதுண்டு தாங்கள் இல்லாவிட்டால் ஒன்றுமே நடைபெறாது என்று "

எழுதியவர் : கவிஞர் இனியவன் (23-Jan-13, 9:30 pm)
பார்வை : 262

மேலே