நீ மட்டும் என்னை...
நான் நட்ட செடி....
மரமாகுமா?
என் வீட்டு பசு...
கன்று ஈனுமா?
அஸ்திவாரம் போட்டிருக்கும்...
புது வீடு...
பூர்த்தியாகுமா?
மரத்தில் நான் எழுதிய...
நம் பெயர் !
நிலைத்து இருக்குமா?
மரணப்படுக்கையில் நான்....
நான் விடை தெரியாமல் ...
விட்டு செல்லும்...
இவை கூட என்னை வாட்டுகிறதே....
நீ மட்டும் என்னை...
எப்படியடி விட்டு சென்றாய்?