நினைவுகள் தந்த வரிகள்..........

அதிவேக ஓட்டத்தின் பாதையிலே
அன்று கண்ட .
அசை போடும் நிலவின் பிரதிபலிப்பால்
அன்று முதல் தொடர்கிறது இக்காவியம்.

ஆசை கயிற்றின் விளிம்பில் நின்று
ஆதி முதல் அவளை ரசிக்கின்றேன்
ஆசை சொல்லா வண்ணம் நிற்கின்றேன்
ஆச்சர்யகுரியாய், இன்று வரை.

இன்றும் என் ரசனை குறையவில்லை
இவள்போல் உருவம் கருவிழி அறியவில்லை
இதயமுடைய அவள் குணம் கண்டு
இது வரை ஆசை விலகவில்லை

ஈரொரு வார்த்தை தேவையடி
ஈர்த்த விழி கண்டு ஒப்பிக்க
ஈரக்கொலை தனின் தொல்லையடி
ஈரம் வற்றும் முன் ஆசை சொல்ல.

உணவாக நெஞ்சிற்கு எண்ணம் தந்தாய்
உறவாக உயிருக்கு உணவு தருவாயா
உரம் தேடும் செடி போல
உன் உறவு தேடி அலையும் உயிராக நான்.

ஊஞ்சல் கட்டி தூங்குகிறேன்
ஊடல் கொண்டு கனவில் வந்தாய்
ஊரறிய காதல் சொன்னால்.
ஊக்கம் தந்து ஏற்று கொள்வாயா!

என் ஏற்கும் திறன் நிரம்பி விட்டதென
எச்சரிக்கும் பெருமூளை
எந்நேரமும் உன் செயல்களின் நினைவுகள்
எப்படி தாங்கும், ஏற்றுகொள்ளவில்லையெனில்...

ஏந்தி நிற்கும் இதயத்தை
ஏற்றுக்கொள்ளும் அந்நாள்
ஏழாம் அறிவும் என் வசப்படும்
ஏமாற்றம் அது நீங்கி விடும்

ஐயம் இன்றி ஏற்றுக்கொண்டால்
ஐந்து மாத நினைவுகளின் வெளிப்பாடாக
ஐவகை நிலம் சாட்சி சொல்ல
ஐம்பொன் சூழ மணமுடிப்பேன்

ஒற்றை கையால் ஏந்தி உலகம் சுற்றுவேன்
ஒன்பதாம் கோளாக நம் வீட்டை மாற்றுவேன்
ஒய்யார உலகினிலே
ஒரு ஆசை விடாமல் நிறைவேற்ற துடிப்பேன்

ஓராயிரம் ஆசை கொண்டு காத்திருக்கிறேன்
ஓரவிழி தந்த ஒரு நொடி பார்வைகளுக்காக
ஓசை தரும் வார்த்தைக்காக
ஓசை இன்றி காத்திருக்கிறேன்

ஔவியம் கொள்ள வைக்கும் அவளது செயல்கள்
அஃதில் பதிந்த நினைவுகள் சொன்ன வரிகள் இஃது ...........

எழுதியவர் : பொ.நகுல்சாமி. (24-Jan-13, 9:15 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 159

மேலே