நீங்களே தலைப்பு வையுங்கள் .....

வெள்ளையனை வியர்க்க வைத்து ...
அவன் கொள்கைகளை தீயிலிட்டு .....

உயிரைப் பிடித்துக் கொண்டு ....அவன்
நம் ஊரை விட்டு ஓடும் வரை ....

உறுதியாய்ப் போராடுவோம்
நம் உயிர் கொடுத்தேனும் .....

என்று ,உத்தமர் பலர் எடுத்த
உத்வேக சத்தியத்தின் சாட்சியாக ....

மக்கள் ஆட்சியாக திகழும்
நம் நாட்டில் .....

எத்தனை முறை மனு கொடுத்தும்
ஏறெடுத்துப் பார்க்க யாருமில்லை .......

கையூட்டு கொடுத்து
அரசுப் பணம் பெற மனமில்லை ....

நடக்க முடியாது நடந்து ....
நா வரண்டு .....

கீழே விழுந்தாலும் .......
கை கொடுத்து தூக்கிட்ட .....

ஊன்று கோலைத் தவிர
உடன் யாருமில்லை .......

தியாகி என்று பட்டம் கொடுத்தவர்கள் !
அவர் வாழ அரசுப் பணம் கொடுக்க முன்வரவில்லை ......

அவரை பார்க்கும் போதெல்லாம் நான்
என் கையில் இருப்பதைக் கொடுத்தாலும் .....

அதை திருப்பி என் பையில் வைத்து ...
எதையும் இலவசமாய் பெறுதல் கூடாது தம்பி ...

என்று மிடுக்குடன் கூறிச் செல்வார்
அந்தப் பெரியார் !

மேலும் நன்றாகப் படித்து நாட்டிற்கு
சேவை செய் என்று என் தோள் உலுக்கி சொல்வார் !

ஓட்டை ரேடியோவை ஜோல்னா பையில்
எந்நேரமும் ஓடவிட்டு பாடல் கேட்கும்
அந்த ஓய்வின்றி இருந்தவர் ......

இன்று இப் புவியில்
இல்லை .....

அவர் வறுமையின்
காரணமாய் இறந்தாரா ???????

இல்லை ,தன் வாழ்நாள் முடிந்து போனாரா ????
என்று இன்றுவரை எனக்கு விளங்கவும் இல்லை !

ஆனாலும் .....
அவர் ஓட்டை ரேடியோவில்
ஓயாது ஓடிக்கொண்டிருந்த
நம் தேசிய கீத பாடல் மட்டும் ....

இன்றுவரை ....
ஓய்வின்றி .....
ஒலித்துக் கொண்டிருக்கிறது என்னில் !


ஒருசில
உருத்தல்களுடனும் .......
கேள்விகளுடனும் ........

குறிப்பு (இந்த நிகழ்வு என் பள்ளிப் பருவத்தில் அதாவது நான் எட்டாம் வகுப்பு பயின்ற போது நிகழ்ந்தது )

எழுதியவர் : ப.ராஜேஷ் (25-Jan-13, 3:44 pm)
பார்வை : 273

மேலே