என் பள்ளி
கடந்த பத்து பதினைய்ந்து வருடங்கள்
உன்னை நினைக்க வில்லை ,
உன்னுடன் பேச வில்லை ,
உன்னை பார்க்கவும் இல்லை.
எனக்கும் ஏதோ புதியதாய் கிடைக்க
மறந்தேன் உன்னை என்னை அறியாமல்.
காரணாம் இல்லாமல் யோசிக்கும்
மனம் மனிதர்க்கு இல்லை - அதனால்
உன்னை பற்றி நான் யோசிக்கவும் இல்லை .
அந்த பெண்ணை நினைப்பேன்
அவள் செய்த குரும்பை நினைப்பேன்
அவளுக்காக நான் செய்த உதவிகளை நினைப்பேன்
ஆனால் எங்களை பாதுகாப்பாய் வைத்த உன்னை
நினைத்ததே இல்லை
எனக்கு கிடைத்த அடி
எனக்கு கிடைத்த பரிசு
எனக்கு பிடித்த விளையாட்டு
எனக்கு பிடித்த முட்டாய்
எல்லாவற்றையும் நினைத்த நான்
உன்னை நினைக்க வில்லை
நான் முதன் முதலாய் உன்னைப் பார்த்த போது
நீ சொன்ன வார்த்தை அன்று எனக்கு கேட்க வில்லை
இப்போது புரிகிறது
நீ தான் என் முதல் நண்பன் என்று
நான் அதிகாலை வருவேன் -ஆனால்
நீயோ எனக்காக அங்கயே இருந்தாய்
மழை வெயில் எங்களை தாக்கும் போதும்
அதை பெருமையாய் நீயே ஏற்றுக்கொள்வாய்
உன்னை மிதித்துள்ளேன்
உன்னை அடித்துள்ளேன்
உன் மீது பச்சை குத்திஉள்ளேன்
ஆனால் இன்றும் என்னை பார்க்கும் போது
நீ சிரிக்கும் அந்த சிரிப்பு
ஆஹா அற்புதம்
உன்னை பார்த்த அந்த நொடி
என்னை மீண்டும் உன்னுடன் அழைக்கின்றாய்
உன்னுடன் விளையாட சொல்கின்றாய் - ஆனால்
இப்போது உன்னுடன் உன் புதிய நண்பர்களும்.
எனக்கு என்றும் பெருமை தான்
நீ என் நண்பன் என்று சொல்வது !
என்னை போல் உனக்கு ஆயிரம் நண்பர்கள் ஆனால்
எனக்கு நீ மட்டுமே!
எனது பழைய நினைவுகள் அதுவும் என் L P S பள்ளியில் நான் அமர்ந்து படித்த அந்த வகுப்பறையை
பார்க்கும் போது!