என்னவளுக்கு என் இறுதிக் கடிதம் ....
என் இதயம் திண்ணும்
அழகிய காட்டேரிக்கு ...
திண்ணக் கொடுத்த இதயத்துடன்
உனக்காய் இருந்து ;இல்லாதவன்
எழுதிக்கொள்வது ......
என்னவளே !
நீ என்னில் வந்தது எப்பொழுது ?
ஒற்றைப் புருவம் தூக்கி
ஓர இதழ் கடித்து
ஒய்யார புன்னகை செய்தாயே !
அப்பொழுதா ?
ஒற்றை விரலால் சீண்டி
உள்ளே போ என்றாயே !
பேருந்து நெரிசலில்...
அப்பொழுதா ?
கரம் விட்டோட்டி
கவிழ்ந்தேனே! வண்டியின் மீது
மரிக்கும் சிரிப்போடு
மறையும் வரைப் பார்த்தாயே !அப்பொழுதா ?
ஏகலைவன் நாண் பூட்டிஇமைகளில்
என் நாளத்தை அருத்தாயே !
அறுபட்ட நாளத்தோடு....
ஆண்டுகள் ஐந்து
சுகமாய் ,சுமையாய் கரைந்தது .
அப்பொழுது ....
காற்றைப் பருகாமல்
நுரையிரல் சுவாசித்ததும்...
மண்ணைச் சீண்டாமல்
பாதங்கள் நடந்ததும்...
குளிரூட்டி சூரியன்
உதிரத்தை உரைத்ததும்..
எத்தனை எத்தனை இனிமைகள் .
இப்பொழுது ...
கற்றுக் கூட கனக்கின்றது
கனம்சேர்ந்த இமைகள் தூங்க... விழிக்கின்றது
பிழிந்து விட்ட இதயம்
துடிக்க மறுக்கின்றது
என்னவளே !
ஒரே !ஒரு முறை ...
நீ எழுதிய கடிதம் கொண்டு
என் கண்ணீர் குளத்தில் ...
கப்பல் விட்டு விளையாட
வந்து விட்டுப் போவாயா ?
உன் பிள்ளையுடன்.