வீரிய இந்தியா சன்னமா?
கொழுத்த இரவினிலே !
கொக்கரிக்கும் எல்லையிலே !
பதுங்கி பின்வந்து
கழுத்தை அறுத்தவனே !
ஒதுங்கியிருப்பதால் எல்லையொடுக்க நினைத்தாயோ?- புலிபோல்
பதுங்கி பாய்ந்தால் நடப்பதை அறிவாயோ ?
உரத்த அன்புண்டு!
உம்முறவுக்கு விருப்பமுண்டு!
முரட்டு சிங்கங்கள்
இத்தேசத்தில் பலவுண்டு!
விரட்டி அடிக்க என்னமா ? - எம்
வீரிய இந்தியா சன்னமா?
பொறுத்து கொண்டிருப்போம் !
நீ!போரென்று வந்திருந்தால்!
நிறுத்துன் நரித்தனத்தை
நேருக்குநேர்வா பயமில்லை !
முரைத்து எதிரியாகு தப்பில்லை! - அறிவோம்
முதுகுக்குப்பின் தீவிரவாத உன்ஊனசெயலை!