எல்லாம் நீயாகி...

சரிந்து விழும்
உன் துப்பட்டாவில் ..
கசிந்து விழும் என் கனவு ...

அசைந்து வரும்
உன் கொடிஇடையில்
இசைந்து நிற்கும் மனசு ...

பூக்கள் மிளிரும்
உன் கூந்தல் காட்டில்
புதைந்து கிடக்கும் என் காதல் ..

வண்ணம் பூசிய
வெண்டை விரல்களில்
எட்டிப்பார்க்கும் என் நேசம் ...

காமம் குளிக்கும்
உன் கண்களுக்குள்
கவிழ்ந்து கிடக்கும் உசிரு ...

எனக்கு
எல்லாம் நீயாகி...
என்னமோ செய்கிறாய் இளமையை ....!!!

எழுதியவர் : அபிரேகா (27-Jan-13, 11:14 am)
சேர்த்தது : abirekha
பார்வை : 130

மேலே