என்ன செய்தாய் என்னை ?

கண்களோரம் தூக்கமில்லை ..
தலையனையோடு
தினம் முனகல் சத்தம்...

தனிமையோடு பேசுகிறேன்
நீ தவமா ..வரமா..?

பசி மறந்து போயிற்று ...
உன் நினைவுகள் உணவாய்...!!

யாரையும் பிடிக்கவில்லை ..
உன் புகைப்படம் போதுமெனக்கு ...?

கண்ணதாசனின் காதல் ..
வைரமுத்துவின் கவிதை ...
நீ அதையும் தாண்டி இனிமையானவள் ...!!

உன் பெயருக்குள்ளேயே
ஒளிந்திருக்கிறேன் ...
தேடாதே ...

என்னை அழ வைப்பது
உன் இஷ்டம் ...

உன் கனவுகளை
என் கண்கள்
பத்திரபடுத்தி வைத்திருக்கிறது
பரிட்சை அட்டையாய்...!!!

ஏதேதோ செய்கிறாய்
எனக்குள் ..
எல்லாமே பிடிகிறது எனக்கும் ...!!

எழுதியவர் : அபிரேகா (27-Jan-13, 11:32 am)
பார்வை : 126

மேலே