வார்த்தை
வார்த்தைகளை பேசாத
வரைக்கும் தான் - அது
உனக்குச் சொந்தம்...
பேசப்பட்டு விட்டால்
நீ அதற்கு அடிமை...
வார்த்தைகளை பேசுவதற்க்கு
முன் கொஞ்சமேனும்
சிந்தியுங்கள் - ஏனெனில்
பேசிய பின் சிந்திப்பதில்
பயனில்லை...
வார்த்தைகள் பலவிதம்
சில வார்த்தை - சிந்திக்க வைக்கும்
சில வார்த்தை - வியக்க வைக்கும்
சில வார்த்தை - திகைக்க வைக்கும்
சில வார்த்தை - சிரிக்க வைக்கும்
சில வார்த்தை - அழ வைக்கும்
சில வார்த்தை - மனதை புண்படித்தி விடும்..
எமது வார்த்தை பலரை
சிந்திக்க வைத்தால் - அது
எம் பெருமை
எமது வார்த்தை பலரை
புண்படுத்தினால் - அது
எம் பாவம்...
பெருமையா??
பாவமா??
நீயே தெரிவு செய்...