அளவே அழகுதான்
கடலும் அழகுதான்
கரையை கடக்காதவரை
சுனாமியும் அழகுதான்
உயிரை சுருட்டாதவரை
தென்றலும் அழகுதான்
சூறாவளி ஆகாதவரை
பூமியும் அழகுதான்
பூகம்பத்தை சந்திக்காதவரை
காதலும் அழகுதான்
கல்லறையை தொடாதவரை
கவிதையும் அழகுதான்
பிறரை கலங்க வைக்காதவரை
அன்பும் அழகுதான்
அடிமையாகாத வரை
அறிவும் அழகுதான்
அடுத்தவரை அழிக்காதவரை
நெருப்பும் அழகுதான்
பிஞ்சுகளை பொசுக்காதவரை
அளவே அழகுதான்
ஆர்ப்பரிக்காதவரை !!!