தனிமை எனக்கு இனிமை

தலைப்பே சிலருக்கு இனிக்கும்
தனித்தே என்றும் இருப்போர்க்கு !

தனிமையில் இன்பம் காண்பவர்
தனிமையை தஞ்சம் அடைந்தவர் !

விழித்திடும் தனிமை உறங்கிடும்
விழிகளில் இனிமை இறங்கிடும் !

தனிமையின் இன்பம் அறிந்தவர்
தவறாது தனிமையை சுவைப்பவர் !

தனிமையை தவிர்ப்பவரும் உள்ளனர்
தனிமையின் இனிமையை மறுப்பவர் !

என்றுமே தனிமை எனக்கு இனிமை
தனித்தே வந்து தனியே செல்வதால் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Jan-13, 11:07 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 223

மேலே