தீவிரவாதம்
![](https://eluthu.com/images/loading.gif)
அகிலத்தின் அரிய பிறப்பாய் பிறந்தவனே
அகிம்சையே அழியா வெற்றியென தெரிந்தும்
தீவிரவாதத்தை தேர்வுசெய்து விழலுக்கு
வீணாய் நீர் பாய்ப்பவனே
நீ உன் சமூகப்பயிர்களை பாதுகாக்கும்
வேலியென நினைத்து கொள்கிறாய்
உண்மையில்
நீ உன் சமூகப்பயிர்களை அழிக்கும்
விஷ கிருமி.
உன் காலில் ஒர்ரிரு
முற்கள் தைத்த காரணத்தால்
முற்களை அகற்றும் முயற்சிகொள்லாமல்
முற்களை பரப்பும் முயற்சியில் அல்லவே ஈடுபடுகிறாய்
உன்னின் ஆடையில் சிறுசகதி பட்டுவிட்டால்
நீரை கொண்டு கலையாமல் ஆடையை
சகதிலேயே சரணாகதி ஆக்கிவிடும்
மூடத்தனம் ஏனோ?
நீ கன்னிவெடிகளை
புதைக்க பறித்த குழிகளில்
மரக்கன்றுகளை நட்டு இருப்பாயின்
இன்று நாடே பசுமை புரட்சி கண்டிருக்கும்
கைதுப்பாக்கி, இயந்திரதுப்பாக்கி
மணிகுண்டு ,மனிதவெடிகுண்டு
என்பல அழிவுச்சாதனங்கள் செய்ய
செலவழித்த நேரத்தையும்
உன் அபரிமிதமான மூளையையும்
அறிவியல் சார் திருப்பி இருந்தால்
இன்று நாடே முன்னேற்ற பாதையில்
ஒரு புதிய மயில்கல் எட்டியிருக்கும்
நேற்று உன் தாய் இத்தேசத்து
சுதந்திர காற்றை சுவாசித்தபடி
உன்னை கருசுமந்தால்
இன்று நீயும் அதே காற்றை சுவாசித்தபடி
நாளை உன் சேய் சுவசிக்கபோகும் காற்றில்
கந்தக விஷத்தை கலக்க நினைப்பதுதான் ஏனோ?
தீவிரவாதத்தால் வெற்றி கொள்வதெல்லாம்
வெற்றிகள் அல்ல
உனக்கும் உன்சமுகத்திர்கும் சேர்த்து
வெட்டிக்கொள்ளும் சவக்குழிகள்தான் அது
வீழ்வதாய் இருப்பினும்
எரிநட்சத்திர கல்லாய் விழாமல்
மழையின் துளியாய் விழு
உன்னின் தயவில் ஓர் உயிர்ராயினும்
உயிர்த்தெழட்டும்
வீரம் என்பது கொல்வது இல்லை
மாறாக மனங்களை வெல்வது தானே நண்பா
தாமதிக்காமல் சிந்தனை செய்
செயல்களை திருத்து
தேவையற்ற பாகங்களை
திருத்தும் செய்து நீக்கும் போது
பாறையே கடவுளின் சிலை வடிவம் பெறும்போது
அகிலத்தின் அரிய பிறப்பான
மனிதப்பிறப்பு கொண்டவன் நீ
மனிதக்கடவுளாய் மாறவா மாட்டாய்
கரகோஷங்கள் வின்பிளக்க
உன்னை போற்றி கொண்டாட
உன்சமூகம் மட்டும் அன்றி
இத்தேசமே எதிர்நோக்கி காத்திருக்கிறது
நம்பிக்கையில் ..........................