ஒரு ஜனனம்

ஆயிரம் முகங்கள் பார்ப்போம்
அலை பாயும் மனங்கள் பார்ப்போம்
சித்தமெலும் மனதில் மட்டும்
கடல் போல சங்கமிப்போம்
ஆவியாய் வானில் சென்று
முகில்களில் தேங்கி நின்று
பாசமாய் பொழியும்போது
காதலே துளிகள்போல
ஆயிரம் கதைகள் சொல்லும்
ஆறோடு கடலாய் மாறும்
காற்றோடு கதைகள் பேசும்
அஸ்தமித்துதித்தபோதும்
கடல்போல சங்கமிக்கும்
ஏன் தெரியுமா ?
காதல்....
மரணமில்லாத
ஒரு ஜனனம்
தனஞ்சன்