அனுபவம்

முறைகொண்ட தேடலை
அயராத உழைப்பினை
கொண்டவன் கைகளில்
ஆண்டவன் அயர்வதில் ஐயமில்லை

நுழைவாயில் அடைத்தாலும்
புதுவாயில் திறக்குமாம் அம்
முதல்வையில் கிடைக்காத
புதுமைகள் நடக்குமாம்

கிடைக்காத செம்மொழி
அடைந்ததே நம் மொழி
அடைந்ததன் காரணம்
விடுகதைதான் அதை
கூர்ந்து நீ நோக்கினால்
ஏடு நீ நோக்கினால்
காலமும் பொதிமையும்
முழு விடைதான்

காற்றிலே வீசிடும் யாவுமே
மூச்சினில் சீவனை காத்திடும்
பொருள்களல்ல மறை
சொல்லிடும் யாவுமே
மனிதரில் பொதுமையில்
மானிடம் காத்திடும் புதுமையல்ல

கற்றதை போற்றி நில்
பெற்றதை காத்து நில்
வாழ்க்கையில் மொத்தமும்
கல்வியேதான் அது
உன்னையே ஆக்கிடும் ஆயுதம்தான்

லட்சியம் வாழ்கையில்
கச்சிதம் காட்டயில்
கற்றவை மொத்தமும்
புது விடைதான் உன்
வாழ்வினில் யாவுமே
அனுபவம்தான்

சிற்பியோடோவிய நடனமும்
பாடலும் காதலும் மோதலும்
கவிகளில் ஞானியும் விஞ்சையும்
சேர்ப்பதில் உழவனும் உயிர்களும்
அரசுடன் யாவுமே
அனுபவம் சீவனம் செய்வதால்தான்


தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (1-Feb-13, 11:52 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 121

மேலே