தாய்மடிச் சுகங்கள் தேடி...

ஒழுகி உதிர்ந்த
வித்துகள் ஓடிக் களைக்கிறது
பூக்காட்டுப்
பாதைகளில்......

களைத்து வீழ்ந்த
பிணங்கள் மிதித்தேறி
மொட்டு திறக்கிறது
அசாதாரணத் துளியொன்று .....

துளிகள் உப்புக் கரிக்குமெனில்
தொட்டுக் கலைக்காத
எதுவொன்றும்
கொலைத் தூது விடுக்கிறது
தேன்துளிகள் பொசுக்க...

தவறிப் பிழைத்த
துளி மூட்டைகளும்
ஊற்றிப் புதைக்கப்படுகிறது
கள்ளிப்பால்
குடமுழுக்குகளோடு....!

மென் மணற்கூட்டம்
அள்ளித் தகர்த்து
பாறைகளிலா அறுவடைப்போம்
பூக்களற்ற தேசங்களில்...?

செடிகள் பிய்த்தெடுக்கும்
பிற்போக்குப் பித்தேறிகள்
கூடவே
தேய்த்தழிக்கிறார் நம்
எதிர்கால நிழல் மூலங்களை...

தாய்மடிச் சுகங்கள்
வேண்டுமெம் எதிர்காலங்களுக்கு....
வதைத்துக் கொல்லாதீர்
வாழ்வியல்
தெய்வீகங்களை.....

எழுதியவர் : சரவணா (1-Feb-13, 9:58 am)
பார்வை : 260

மேலே