உயிரே ....
உயிரே
உன்னோடு சேர்ந்து இருக்கும்
ஒரு பொழுது வேணும்
ஆயுளுக்கும் நான்
அர்த்தமற்று
வாழ்வதை விட
அந்த சொற்ப சந்திப்பு
என் உயிர் பிரிந்தாலும்
உயிர்த்திருக்கும்
அன்பே- நான்
நீயாக வேண்டும்
எனக்குள் உன்னை
சுமக்க வேண்டும்
நெஞ்சத்துள் நிறைத்து இருக்கும்
உன் நினைவுகளை
நித்தமும் மீட்டி பார்க்க
நிலையான உறவாக
நீ வர வேண்டும்
என் உயிரே
எனக்குள்
நீ வேண்டும்