தொலைத்து விட்ட வானவில்கள்....!
விடியலில் புது மலர்போல்
விளையாடினோம் சிறு வயதில்
விபரம் வந்து மணம் முடிந்து
விலகிணோமே இள வயதில்
தொலைந்து போன நட்பு எங்கே
தொலை தூரம் சென்றவளே - பூத்
தோட்டத்தில் என் இரு மழலைகள்
துள்ளிப் பாண்டி ஆடுகையில்....
தோகை விரித்தாடுதடி மனதில்
தூய்மையான நமது நட்பு....
கணவரவர் வந்து விட்டார்
கட்டி வைக்கிறேன் நம் நட்புக் கனவை...
காலம் பல போன பின்பும் என்
கனவிலே தெரிகிறாயடி......!
கட்டாயம் நீயும் எனை நினைப்பாய் என
கருத்திலே ஏற்றியபடி காப்பி ஆற்ற செல்கிறேனடி..