என் தோழியே...
என் பள்ளி தோழியின் பிரிவில் நான் உணர்ந்தது :
என் பிரிய சகியே.. !
சிட்டுகுருவியின் சுதந்திரத்தோடு சுற்றிய காலத்தில்
சிறகுவிரித்து என்னுடன் சிரித்து வந்தவளே..!
கண் விழித்து கனவு காண்கையில்
கைகோர்த்து உடன் வந்தவளே..!
மெய்மறந்து நான் மொழிகையில்
தன்னை மறந்து அதை கேட்பவளே..!
கதைகள் பல கதைத்து கதைத்து
இரவுகள் பல கழித்தோம்,
கால் கடுக்க நடந்து நடந்து
காதங்கள் சில கடந்தோம்,
உண்டி, உறை, உடை இவற்றுடன்
உணர்வுகளையும் பகிர்ந்தோம்
உண்மையாய் நட்பித்தோம்..!
இதயத்தின் மையத்தில் எவராலும்
நிரப்ப முடியா இடமொன்றை நினக்களித்தேன்
சூழலால் விட்டு சென்றாய்
சூனியமாய் ஆனேன் நான்..
கண்ணீர் ஏந்த நின் கைகளின்றி
குளியலறை நிரம்பிற்று,
தாங்கி பிடிக்க நின் தோளின்றி
தரையில் விழுந்து சிதறினேன்,
கட்டியணைக்க நீயின்றி என்
வெற்றிகளும் வீழ்ந்து போயின !
உறவுகொள்ள யாருமின்றி என்
உணர்ச்சிகள் ஊமையாயின !
வசந்தங்கள் வந்து போகும்
காலங்கள் அதில் கரைந்து விடும்
காயங்களும் ஆறிவிடும்
வடுக்கள் காத்திருக்கும் நினக்காக - ஒரு நாள்
ஏற்புடன் நீ வருவாய், அன்று
என் காய சுவடுகளுக்கு கழும்பிடுவாய்...
வடுக்களில் வேரூன்றி பூக்கள் மலரும்
அதையும் பறித்து நினக்கே சூட்டிடுவேன்...
காத்திருக்கிறேனடி...! காலம் தாழ்தாதே.!