kataviludal
கட்டிப்போட்ட கைகள்
எட்டிப்பிடிக்க நினைப்பது
என்னவோ பட்டாம்பூச்சியைத்தான்..
கட்டவிழ்ந்தால்
சிலநேரம் சிறகொடியலாம்
அந்தப்பட்டாம்பூச்சிக்கு...
சிலநேரம் வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள்போல
வாழ்க்கை அமையலாம்
இந்தக்கைகளுக்கு!!
பூகம்பமோ பூக்கம்பமோ
அவரவர் விதி!!
அடங்காத உலகமும்
அடக்கமுடியாத கைகளும்
கட்டப்பட வேண்டும்
அளவில்லா ஆசையினாலும்
ஆணவத்தாலும் அழியாமலிருக்க...
கட்டவிழ்ந்த கைகள்
நன்மை செய்தால்
விண்ணைத் தொடலாம்
வீரியமிக்க வரலாறும்
படைக்கலாம்..
தீமை செய்தால்
கடைசியில் மண்ணில்
மட்டுமே புதையலாம்!!