காதலிலும் கலப்படமா ?
காதல் காதல் என உருகி
காதலிக்கும் உள்ளங்கள்
ஊடல் உருவெடுத்தால்
குறை காணும் இருவரும்
வர்ணிக்கும் வார்த்தைகள்
உலகமே நினைத்திடும்
உண்மை காதலர்களா
உள்ளத்தில் கள்ளமா
இதயத்தில் மின்வெட்டா
எண்ணத்தில் எதிர்மறையா
நோக்கமே இலைமறைவா
காதலிலும் கலப்படமா
உண்மையும் தெளிவும்
இல்லாத ஏதும் இவ்வுலகில்
காதல் அன்றி அனைத்துமே
புரியாத உள்ளங்களுக்கு என்றும்
கற்கண்டும் கசந்திடும்
தேனும் பாலும் நஞ்சாகும்
மின்னிடும் வண்ணங்களும்
கண்ணில் மறைந்திடும் !
( நேற்று நேரில் ஒரு காதல் ஜோடியை
பார்த்ததின் எதிரொலி )
பழனி குமார்