நேரமும்..காலமும்..!!

" நேரத்திற்கும் மதிப்பில்லை..!!
காலத்திற்கும் மதிப்பில்லை..!! "

கண்ணிமைக்கும் நேரம் ஒரு கணம் அன்று..!!
கண்ணிமைக்கும் நேரம் ஒரு தினம் இன்று..!!

ஓடுகிற ஓட்டமும் தேடுதல் வேட்டையும்..!!
நிமிடங்களை இலவசமாக தரவில்லை..!!

நிம்மதியை பணம் கொடுத்ததும்..!!
பெறமுடிவதில்லை..!!

காதலையும் அன்பையும் பகிர்ந்து கொள்ள..!!
காலம் கிடைக்கவில்லை..!!

ஆனால் காமத்திற்கு மட்டும் ஏனோ..!!
வயசு எல்லை..!!

குடும்பத்திற்கு உழைக்க தான்..!!
நீ ஓடுகிறாய்..!!

ஆனால் என் இதயம் வேகமாக..!!
துடித்துக்கொண்டே என்னை கேட்கிறது-
" நேசிக்கத்தான் உனக்கு நேரமில்லை..
நிம்மதுயாக சுவசிக்கவாவது விடேன் "-என்று.
"ஓ.. உலகமே..!!
நீ உன்னையும் சுற்றிக்கொண்டு..
சூரியனையும் சுற்றுகிறாய்..
மனிதனோ..!!
தன்னை சுற்றுபவளை சுற்றாமல்..
உன்னை சுற்றுகிறான்.. "

கை பிடித்தவள் கரம் மறந்து..!!
உயரம் நோக்கி மட்டுமே பறப்பவர்கள்..!!
இருக்கும் உலகில்..
" நேரத்திற்கும் மதிப்பில்லை..!!
காலத்திற்கும் மதிப்பில்லை..!! "

எழுதியவர் : Sudharenganathan (5-Feb-13, 12:41 pm)
சேர்த்தது : Sudharenganathan
பார்வை : 89

மேலே